×

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: நடிகை மாதுரி தீக்சித் தகவல்

மும்பை: 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகை மாதுரி தீக்சித் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மும்பையில் மாதுரி தீக்சித்தை பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும், மகராஷ்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் சந்தித்து பேசியிருந்தனர். இதனையடுத்து அடுத்த ஆண்டு 2019 நடைபெறும் தேர்தலில் புனே தொகுதியில் மாதுரி தீக்சித்தை பா.ஜ.க களம் இறக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மகராஷ்ரா மாநிலம் புனே தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் மாதுரி தீக்சித் பெயர் உள்ளதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியிருந்தார். ஆனால் இந்த தகவலை மாதுரி தீக்சித் மறுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அந்த தகவல் வெறும் யூகம் மட்டுமே என்றும் மாதுரி விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madhuri Dixit ,election , BJP, parliamentary election, actress Madhuri Dixit
× RELATED இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர்...