×

நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் கோமாரி நோய்... 2 வாரத்திற்கு கால்நடை சந்தைகளுக்கு தடை

நெல்லை: பனி மற்றும் குளிர் காரணமாக கோமாரி நோய் பரவி வருவதால் நெல்லை மாவட்டத்தில் 2 வாரத்திற்கு கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள நயினாரகரம், மேலப்பாளையம், வள்ளியூர், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட கால்நடை சந்தை வாரந்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த இடங்களில் 2 வாரங்களுக்கு கால்நடைகளை விற்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

விற்பனையாளர்கள் சந்தைக்கு வந்த பிறகே ஆட்சியர் சந்தைகளை மூடும் படி உத்தரவிட்டது தெரியவந்துள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் சில இடங்களில் உத்தரவையும் மீறி கால்நடை விற்பனை நடைபெற்று வருவதாக அவர்களை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Komari ,district ,Nellai , Komari Disease, Tirunelveli, Veterinary Markets, District Administration,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...