×

மலேசிய மணல் குறித்து ஜனவரியில் இறுதி விசாரணை

சென்னை: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலை தமிழகம் முழுவதும் விற்க அனுமதி கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.   “தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும்; புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது, ஜல்லியை தவிர்த்து கிரானைட் குவாரிகளையும் மூட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. முதற்கட்டமாக மணலுக்கான ₹10கோடி தொகையை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவோலையாக செலுத்தியது. இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது,” மலேசியா இறக்குமதி மணலை எடுத்து விற்பனை செய்ய தமிழக அரசுக்கு தூத்துக்குடி துறைமுகம் அனுமதியளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் மணல் தொகையில் ஏதேனும் நிலுவை இருப்பது தெரியவரும் பட்சத்தில் அதனையும் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்து வழக்கை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக்குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மலேசிய இறக்குமதி மணல் தொடர்பான இறுதி விசாரணையை வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் நீதிமன்றம் மேற்கொள்ளும் என நேற்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Malaysian , Malaysia, sand, Thoothukudi harbor, final trial
× RELATED மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் பலி