×

ரயிலில் திருடுபோன செருப்பை கண்டு பிடிச்சு தாங்கப்பா.. போலீசில் 2வது புகார் பதிவு

சென்னை: ரயிலில் பயணம் செய்த போது ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள என்னுடைய செருப்பை காணவில்லை. அதை கண்டுபிடித்து தர வேண்டும் என ரயில்வே போலீசில் தொழிலதிபர் புகார் அளித்துள்ளார்.  சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் நுபைல் தைக்கா (48). இவர், கேரள மாநிலம் கன்ஹன்காடுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். இந்நிலையில் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் நுபைல் தைக்கா, தான் அணிந்திருந்த விலை உயர்ந்த செருப்பை படுக்கைக்கு அடியில் போட்டு விட்டு மேல் படுக்கைக்கு தூங்கச் சென்றார். பின்னர் காலையில் கண் விழித்து பார்த்த போது நுபைல் தைக்கா கழிவறைக்கு செல்வதற்காக கீழே இறங்கி பார்த்த போது செருப்பு காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரயில் பெட்டியில் அங்கும் இங்கும் தேடிப்பார்த்தார். ஆனால் செருப்பு கிடைக்கவில்லை. அதற்குள் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் இதுகுறித்து ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமாரை சந்தித்து தனது செருப்பு காணாமல் போனது குறித்து புகார் மனு அளித்தார். அதில் செருப்பின் மதிப்பு 9 ஆயிரம் என்றும், அதை கண்டுபிடித்து தருமாறும் கூறியிருந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, சென்னையில் ஒருவர் தனது செருப்பு காணாமல் போனதாக புகார் கொடுத்திருந்தார். தற்போது, மேலும் ஒருவர் செருப்பை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Train ride, stolen shoes, railway police
× RELATED மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி...