×

வந்தவாசி அருகே 380 டன் எடையுள்ள விஷ்ணு சிலை பெங்களூரு கொண்டு செல்லும் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 380 டன் எடையுள்ள விஷ்ணு சிலை பெங்களூரு கொண்டு செல்வதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இன்னும் 1கி.மீ தூரம் உள்ள தார் சாலையை அடைவதற்கு இன்று இரவு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோதண்டராமன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெருமாள் சிலை மற்றும் ஆதிஷேஷவன் சிலை அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. ஒரே கல்லில் 380 டன் எடையுள்ள பெருமாள் சிலை மற்றும் 250 டன் எடையுள்ள ஆதிஷேஷவன் சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த கோவில் நிர்வாகம் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான பாறையை கண்டறிய ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை என்ற இடத்தில் சிலை வடிவமைப்பதற்கான பாறை கண்டறியப்பட்டது.

இதற்காக மத்திய மற்றும் மாநில அரசிடம் இருந்து  380 டன்  மற்றும் 250 டன் எடையுள்ள பாறையை வெட்டி எடுக்க அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 2015 ஆம் ஆண்டு பூஜைகள் போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 3 வருடம் கடந்த நிலையில் 380 டன் எடையுள்ள பெருமாள் சிலையில் 64 அடி உயரமும் 26 அடி அகலமும் 7 அடி உயரமும் கொண்ட சிலையில் 11 முகங்கள் 22 கைகள் செதுக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிலையை பெங்களூரு கொண்டு செல்ல  180 டயர் உள்ள பிரத்தியோக கார்கோ வாகனம் வரவழைக்கப்பட்டு வெட்டியெடுக்கப்பட்ட கல்பாறை ஏற்றப்பட்டது. பாரம் தாங்காமல் டயர் வெடிக்க தொடங்கியது. இதையடுத்து 240 டயர் கொண்ட பிரத்தியோக கார்கோ வாகனம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலை கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vishnu ,Vandavasi , Thiruvannamalai, Vandavasi, Vishnu Statue, Bengaluru, work, weigh 380 tonnes
× RELATED ஆவடி காமராஜர் சிலை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு