×

பவானிசாகர் தெங்குமரஹாடா சாலையோரம் மான்கள் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம்: பவானிசாகரிலிருந்து தெங்கு மரஹாடா செல்லும் சாலையோரங்களில் இரைக்காக மான்கள் மேய்வதை பேருந்தில் செல்லும் பயணிகள் கண்டு ரசித்து  செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் அதிக  பரப்பளவு கொண்டது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. மான்களில் புள்ளிமான், கடமான்,  பிளாக்பக் என்றழைக்கப்படும் வெளிமான் போன்ற பல வகை உள்ளன.

இவற்றில் பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியில் வெளிமான்கள் அதிக அளவில் வசிக்கின்றன. தமிழகத்திலேயே தெங்குமரஹாடா வனப்பகுதியில்தான் இவை அதிகளவில் உள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். இவை வசிக்கும்  வனப்பகுதி செழுமையான வனம் எனவும் கூறப்படுகிறது. இதன் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில்  பவானிசாகரிலிருந்து தெங்குமரஹாடா செல்லும் சாலையோர வனப்பகுதியில் வெளிமான்கள் நடமாடுவதை பேருந்தில் செல்லும் பயணிகள் கண்டு ரசித்து  செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Travelers ,Bhavanisagar Tangkumarada Roads , Bhavanisagar, deers, tourists
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை