×

மயிலாப்பூர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க மூவர் குழு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை தெரிவித்துள்ளது. மயில் சிலை மாயமானது குறித்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை குறித்து விசாரணை நடத்த ராமேஸ்வரம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர்கள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூவர் குழு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

முன்னதாக ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகத்தின் போது சிலைகள், கதவுகள் மாற்றப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : group ,Mylapore , Mylapore, temple, peacock statue, kapaleeswarar, missing
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...