×

இந்தியாவில் 5ஜி சேவை வசதி வருகிற 2022ம் ஆண்டில் தான் கிடைக்கும் : டிராய் செயலாளர்

டெல்லி : இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்யின் செயலாளர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய  எஸ்.கே. குப்தா, வருகிற 2022ம் ஆண்டில் தான் நாட்டில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என்றும் இதன் மூலம் டேட்டா மற்றும் இணையதள வசதிகள் பெரிதும் மேம்படும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகள் டிஜிட்டல் தளத்திலான இணைப்புக்கள் பல மடங்கு அதிகரித்து ஆதிக்கம் செலுத்தும் என்று கூறிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவை நுகர்வோரின் மனநிலையில் மிக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் குப்தா கூறினார். மேலும் இந்தியாவில் சுமார் 40 கோடி மக்களுக்கு தரமான இணையதள சேவை கிடைத்து வருவதாகவும் குப்தா குறிப்பிட்டார்.

நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயன்பாடு வேகமாக அதிகரிப்பதாக சுட்டி காட்டிய அவர்,இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தபடுகின்றன என்றார். மேலும் அவர் கூறியதாவது, மக்கள் ஊடகம் தொடர்பான செய்திகளை டிஜிட்டல் முறையில் கையாள மிகப்பெரும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே நுகர்வோர் தேவையை உணர்ந்து அவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஊடகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Troy Secretary , 5G spectrum, SK Gupta, Trai, Technology
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...