×

வில்லியம்சன் 139*, நிக்கோல்ஸ் 90* ரன் பரபரப்பான கட்டத்தில் நியூசிலாந்து-பாக். டெஸ்ட்

அபுதாபி: வில்லியம்சன் 139* ரன், நிக்கோலஸ் 90* ரன் எடுக்க நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.  நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் அபுதாபியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 274, பாகிஸ்தான் 348 ரன் எடுத்தன. 74 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்னுடன் இருந்தது. 4ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சோமர்வில்லி 4 ரன் எடுத்த நிலையில் யாசிர் ஷா சுழலில் ஆட்டமிழந்தார்.

அனுபவ வீரர் டெய்லர் 14 பந்தில் 22 ரன் விளாசி ஷாயீன் ஷா அப்ரிடி பந்தில் வெளியேறினார். 60 ரன்னுக்கு 4 விக்கெட் பறிபோன நிலையில், கேப்டன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தனர். பாகிஸ்தானின் மிரட்டும் பந்துவீச்சை சமாளித்து ஆடிய இந்த ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.வில்லியம்சன் 154 பந்தில் சதம் அடித்தார். இந்த ஜோடி மிக நிதானமாக ஆடி 436 பந்தில் 200 ரன் சேர்த்தது. ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களுடன் உள்ளது.

வில்லியம்சன் 139 ரன், நிக்கோல்ஸ் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று ஆட்டத்தின் கடைசி நாள். நியூசிலாந்து கைவசம் 6 விக்கெட் உள்ளது. அந்த அணி 198 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், பரபரப்பான கட்டத்தை ஆட்டம் எட்டியுள்ளது. 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

82 ஆண்டு சாதனையை தகர்த்தார் யாசிர் ஷா
சோமர்வில்லி விக்கெட்டை நேற்று வீழ்த்திய யாசிர் ஷா, டெஸ்ட் அரங்கில் தனது 200வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், குறைந்த டெஸ்ட்டில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டி, 82 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். 1936ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கிரிம்மெட், 36 டெஸ்டில் 200 விக்கெட் வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை யாசிர் ஷா முறியடித்துள்ளார்.

இதற்கு முன், இந்தியாவின் அஷ்வின் 2016ல் 37 டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றி, கிரிம்மெட்டின் சாதனையை மிக நெருங்கி வந்தார். முன்னாள் பந்துவீச்சாளர்கள் ஆஸியின் டேனிஸ் லில்லி, பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் ஆகியோர்   ஆகியோர் 38வது டெஸ்டிலும், தென் ஆப்ரிக்காவின் ஸ்டெய்ன் 39வது டெஸ்டிலும் 200 விக்கெட் மைல்கல்லை எட்டி உள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Williamson 139 ,Nichols 90 * Run ,Bach ,Test ,New Zealand , Williamson, Nichols, Pakistan, New Zealand, Test
× RELATED பேரவையில் பாக். ஆதரவு கோஷம் காங்கிரஸ்...