×

மேற்கு வங்கத்தில் பதற்றம்: பாஜ ரத யாத்திரைக்கு அரசு அனுமதி மறுப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் இன்று ரத யாத்திரை நடத்த பாஜ ஏற்பாடு செய்து வந்தது. கூச்பிகாரில் தொடங்கும் யாத்திரைக்கு பாஜ தலைவர் அமித்ஷா தலைமை தாங்க இருந்தார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீஸ் மறுத்தது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜ வழக்கு தொடர்ந்தது. இது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசின் வக்கீல், `‘அமித்ஷாவின் யாத்திரையால் மதமோதல் ஏற்படும் ஆபத்து இருப்பதால், போலீஸ் அனுமதி மறுத்துள்ளது’’ என்றார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்து பாஜ.வின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உடனடியாக பாஜ மேல்முறையீடு செய்தது. ஆனால், இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்தது. அதனால் இன்று நடக்க இருந்த ரத யாத்திரையை பாஜ ஒத்திவைத்துள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,West Bengal ,Bhaj Rath Yatra , West Bengal, Bhaj Rath Yatra, Government
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு