×

62-வது நினைவுதினம் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

சென்னை: அம்பேத்கர் 62வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அம்பேத்கரின் 62வது நினைவுநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். அப்போது, பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர்கள் காரத்தே தியாகராஜன், அரும்பாக்கம் வீரபாண்டியன் உடனிருந்தனர். இதுபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

மேலும், சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செய்தார். துணை தலைவர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேசன், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், முனவர் பாஷா, சைதை நாகராஜ் பங்கேற்றனர்.கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதில் துணைசெயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, சமக தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் சரத்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sermon ,Ambedkar ,leaders , Ambedkar, statue, Honor , leaders
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா