×

பாபர் மசூதி இடிப்பு விவகாரம் மஜக, தமுமுக ஆர்ப்பாட்டம்

ஆலந்தூர்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று (6ம் தேதி) விமான நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், இந்த போராட்டம், பரங்கிமலையில் உள்ள ஜோதி தியேட்டர் அருகே நடந்தது. கட்சியின் ெபாதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ தலைமை வகித்தார். கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு முன்னிலை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் பாஜ, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற அமைப்புகள், ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுக்கின்றன. பசு காவலர்கள் என்ற போர்வையில் நடைபெறும் கொலைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தேர்தலில் ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைத்து பிரிவினை சக்திகளுக்கு பாடம் புகட்டப்படும்’’ என்றார். இதேபோல் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமுமுக கட்சி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் தாம்பரம் அடுத்த செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட தலைவர் சலீம்கான் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Babri Masjid , BabAr Masjid demolition ,issue Majaka, demonstration demonstration
× RELATED சாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட...