×

செயற்கை உரங்களை தவிர்த்து மண்வளத்தை காக்க வேண்டும்: கலெக்டர் அட்வைஸ்

காரைக்குடி: இயற்கையிலேயே சிறந்த விளங்கும் மண்வளத்தை செயற்கை உரங்களை அதிகளவில் போட்டு மண்ணை மலடாக்ககூடாது என மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பேசினார்.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மண்வளதினத்தை முன்னிட்டு பயிர்களில் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. தோட்டக்கலைதுறை இணை இயக்குநர் ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பேசுகையில்,‘‘ சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை நல்ல மண்வளம் உள்ள பகுதியாக உள்ளது. மண் துகள்களுக்கு இடையே அதிகமான இடைவெளி இருந்தால் தான் காற்றோட்டம் சிறப்பாக இருந்து பயிர்கள் சிறப்பாக வளரும். இயற்கையிலேயே இம்மாட்டத்தை நல்ல மண்வளம் உள்ள நிலையில், பரிந்துரைக்கப்பட்ட அதிகளவில் செயற்கை உரங்களை போட்டால் எதிர்விளைவுகள் உருவாகும்.

இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மண்ணை வளப்படுத்த மண்புழு உரம் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். குன்றக்குடி வேளாண் அறிவியில் நிலையம் இயற்கை விவசாயத்திற்கு அதிகளவில் ஊக்குவிப்பது பாராட்டக்கூடியது’’என்றார்.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் பேசுகையில்,‘‘நிலைத்த நீடித்த விவசாயத்திற்கு மண் மிகஅவசியம். இன்னும் 60 ஆண்டுகளுக்குள் மேல்மட்ட மண் முழுவதும் சுரண்டப்படும் என ஆய்வு தெரிவித்துள்ளது. அப்படி சுரண்டப்பட்டு விட்டால் மண்மாசு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். தேவைக்கு அதிகமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட உரம், பூச்சிமருந்து பயன்படுத்துவது, தொழிற்சாலை கழிவுகள் மண்மாசுக்கு காரணமாகின்றன. உழவனின் நண்பன் மண்புழு ஆனால் மண்புழுக்கள் மண்ணில் வாழ முடியாத நிலை உருவாகி உள்ளது’’என்றார்.
கிராமிய பயிற்சிமைய இயக்குநர் அப்பாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Artificial fertilizer, soil, collector, advise
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...