×

காலணிகளை சுத்தம்செய்து சேகரிப்பு : கஜா புயல் பாதித்த நாகை மக்களுக்கு நெல்லை வாலிபர் நிவாரணம் வழங்கல்

நெல்லை: காலணிகளை சுத்தம்செய்து ‘கஜா’ புயலுக்கு நிவாரண நிதி சேகரித்த நெல்லை வாலிபர் பாப்புராஜ், நாகை மாவட்டத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கினார். நெல்லையைச் சேர்ந்தவர் பாப்புராஜ். சமூக ஆர்வலரான இவர், ‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பொருட்டு நெல்லையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களின் காலணிகளை தினமும் 2 மணி நேரம் வீதம் 7 நாட்கள் சுத்தம்செய்தார். இதன்மூலம் திரட்டிய ரூ.31, 473 மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சங்கரநாராயணன் உள்ளிட்ட குடும்ப நண்பர்கள் மூலம் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் சேகரித்தேன்.

 பின்னர் ‘கஜா’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம்  மாவட்டம், திருப்பூண்டி பகுதியில் உள்ள காரப்பிடாகை கிராமத்திற்கு சென்று 100 குடும்பத்தினருக்கும், அதைத் தொடர்ந்து வேதாரண்யம் பகுதியில் உள்ள ஆர்க்காட்டுதுறை கிராமத்தை சேர்ந்த 50 குடும்பத்தினருக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்கினார். நெல்லை பயிற்சி கலெக்டர் சுகபுத்ரா வழிகாட்டுதலின் பேரில்  நாகை மாவட்ட சிறப்பு தாசில்தார் ராமச்சந்திரன் இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nellai , Kaja storm, Nagai, relief
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...