×

ஈரோட்டில் பனி பொழிவு அதிகரிப்பு : ஸ்வட்டர்,கம்பளி விற்பனை சூடுபிடித்தது

ஈரோடு: ஈரோட்டில் இரவு நேரத்தில் பனி பொழிவு துவங்கி விட்டதால் ஸ்வட்டர், கம்பளி போர்வைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் முதல் பிப்., மாதம் வரை பனிக் காலமாகும். ஆனால், நடப்பாண்டு முன்கூட்டியே பனிக்காலம் துவங்கிவிட்டது. மேலும் மாவட்டத்தில் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் கடுங் குளிர் வாட்டி வருவதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருமே குளிரால் அவதிப்படுகின்றனர். பனியின் காரணமாக பிரப்ரோடு, மணிக்கூண்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரத்தில் 30க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் ஸ்வட்டர், கம்பளிப் போர்வை, தலைக் குல்லா உள்ளிட்டவைகள் விற்பனைக்காக குவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்வட்டர் வியாபாரிகள் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதி, காஷ்மீர் மாநிலத்தில் இருந்து கம்பளி, ஸ்வட்டர் போன்றவைகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். நடப்பாண்டு முன்கூட்டியே குளிர் தொடங்கிவிட்டதால் ஸ்வட்டர், கம்பளி ஆகியவற்றை மக்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர். இதனால் இந்த ஆண்டு விற்பனை நன்றாக உள்ளது. இதில்  ஸ்வட்டர் ரூ.150 முதல் ரூ.450 வரையிலும், ஸ்கார்ப் ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், சால்வை ரூ.250 முதல் ரூ.400 வரையிலும், கம்பளி போர்வை ரூ.300 முதல் 750 வரையிலும் விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Erode, snowfall, sweater
× RELATED தென்காசி மாவட்டத்தில் வெயிலின்...