×

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடத்த வாடகை நிர்ணயம்

சென்னை: பொது நூலகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் நவீன வசதிகளுடன் 8 மாடிகள் உள்ளன. இந்த கலை அரங்கின் ஒருநாள் வாடகை 2 லட்சத்து 31 ஆயிரத்து 224 என (இதர கட்டணங்கள் மற்றும் வரிகள் நீங்கலாக) அரசால் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் (பொது நூலகத்துறை) அரசாணை 152ன்படி கலை, பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் புத்தக வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு  வாடகை கட்டணத்தில் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ஒருநாள் வாடகையாக 92 ஆயிரத்து 490 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவோர் 044-22201033, 22201011, செல்போன் எண் 90032 12156 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anna Centenary Library , Anna Centenary Library
× RELATED அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்கு...