×

இந்திய அறிவியல் ஆய்வு கழகத்தில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்து விஞ்ஞானி பலி

பெங்களூரு: பெங்களூரு  மத்திய மண்டல சதாசிவாநகர் சரகத்திற்குட்பட்ட மல்லேஸ்வரம் 8வது கிராசில்  அமைந்துள்ளது  இந்திய அறிவியல் கழகம்.  பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று  புதிதாக தொழில் தொடங்குவதற்காக, இந்திய அறிவியல் கழகத்துடன் ஒப்பந்தம்  செய்திருந்தது. அதற்கான ஆய்வு கடந்த சில வாரங்கள் இந்திய அறிவியல் கழக  ஆய்வு கூடத்தில் நடந்து வந்தது. நேற்று காற்றியல் ஆய்வகத்தில் பிரத்யேக  ஆய்வு நடந்து வந்தது. இந்த ஆய்விற்கு விஞ்ஞானி மனோஜ் குமார் என்பவர் தலைமை  வகித்தார். இவர்களுடன் 3 தொழில் நுட்ப நிபுணர்கள் ஆய்வு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

மதியம் 2.20 மணியளவில் இவர்கள் ஆய்வு  பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆய்வுக்கூடத்தில் இருந்த ஹைட்ரஜன் சிலிண்டர்  ஒன்று திடீர் என்று வெடித்து சிதறியது. இதில் ஆய்வு கூடம் முழுவதும் தீ  பற்றியது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட விஞ்ஞானி மனோஜ் குமார் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் இருந்த தொழில் நுட்ப நிபுணர்கள் 3  பேரும் பலத்த காயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த சக  மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள், காயமடைந்த  3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த விஞ்ஞானியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து  போலீ்ஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Scientist ,Indian Science Institute , xplosion at IISc Bangalore kills scientist, critically injures 3 others
× RELATED விடுமுறை நாளில் ஜாலியாக இருப்பதற்காக...