×

காஷ்மீரில் நடந்த அவலம் கூரை இல்லாத பள்ளியில் வாக்களித்த வாக்காளர்கள் : அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஜம்மு: காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ளது கவாஸ் ஊராட்சி ஒன்றியம். இங்குள்ள கெரிகோடசர்வால் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி நேற்று முன்தினம் நடந்த காஷ்மீர் 7வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் வாக்குச்சாவடியாக ஒதுக்கப்பட்டிருந்தது. மேற்கூரை இல்லாமல் இடிந்த நிலையில் காணப்படும் இந்த பள்ளியை வாக்குச்சாவடியாக ஒதுக்கிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அடிப்படை வசதி எதுவும் இல்லாத மேற்கூரை இல்லாத இந்த பள்ளியில் வாக்குப்பதிவு நடத்த அனுமதித்தது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு நடத்தாத கிராம ஊழியர் மற்றும் கிராம ரோஜ்கார் சகாயக் ஆகிய 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதை வாக்குச்சாவடியாக அனுமதித்த கவாஸ் பகுதி வட்டார வளர்ச்சி அதிகாரியின் சம்பளத்தை நிறுத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Voters ,Kashmir , Voters who voted , school, without a roof, Kashmir
× RELATED டிக் டாக் செயலிக்கு தடைவிதிப்பு...