×

ஆஸி., கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் 6 வயது சிறுவன்: விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என விருப்பம்

அடிலெய்டு: இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்து 6 வயது சிறுவன் ஒருவனும் ஆஸ்திரேலிய சீருடையுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். ஆர்ச்சி ஷில்லர் (Archie Schiller) எனும் 6 வயது சிறுவன் பிறப்பிலிருந்தே இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இதன் காரணமாக அச்சிறுவனுக்கு இதுவரை 13 முறை அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது எனும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. சிறுவனின் உடல்நிலையையும், அவனிடம் இருக்கும் கிரிக்கெட் ஆவலையும் மேக் எ விஷ் (Make A Wish) எனும் உலகளாவிய தொண்டு நிறுவன அமைப்பு மூலம் அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், சிறுவனை ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய அனுமதி அளித்துள்ளது.

மெல்போர்னில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டி வரை ஆஸ்திரேலிய வீரர்களுடன் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். லெக்-ஸ்பின்னர் ஆக வேண்டும் என்பதே தனது விருப்பம் என அந்த சிறுவன் கூறியுள்ளான். மேலும் தனது சுழற்பந்து வீச்சால் இந்திய கேப்டன் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை எனவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,cricket players ,Virat Kohli , Australia,boy,training,cricket,players,wish,Virat Kohli,
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்