×

சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

டெல்லி: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியல் பற்றி பேசும் நாவல் சஞ்சாரம். 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் ஆவார் எஸ்.ராமகிருஷ்ணன்  குழந்தைகள் இலக்கியம், பயண கட்டுரைகள், நாடகம் உள்ளிட்டவற்றில் சிறப்பான பங்களித்துள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். 1984-ம் ஆண்டிலிருந்து சிறுகதை, நாவல், புதினம் உள்ளிட்ட ஏராளமானவற்றை எழுதி வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற உள்ள இவர் இதுவரை சுமார் 125 நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாபா, சண்டக்கோழி, பீமா, தாம் தூம், அவன் இவன், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களுக்கு ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.

மகிழ்ச்சி:
சாகித்ய அகாடமி விருது தமக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழச்சியளிப்பதாக எஸ்.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். தமக்கு இந்த விருது கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளாக முழுநேர எழுத்தாளராக இருக்கும் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி என்றார். நாதஸ்வர கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி ‘சஞ்சாரம்’ நாவலை எழுதியதாக கூறிய அவர், இந்த நாவலை எழுதி முடிக்க ஒன்றரை ஆண்டுகாலம் தேவைப்பட்டது என குறிப்பிட்டார்.

இலக்கியப் படைப்புகளுக்கான உயரிய கவுரவமாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆயிரக்கணக்கான இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.

சாகித்ய அகாதமி விருதுகளுக்கு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்பட 24 மொழிகளில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதும் பாராட்டுப் பட்டயமும் அளிக்கப்படுகிறது. இந்திய மொழிகளில் உள்ள சிறந்த நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ் பிரிவுக்கான சாகித்ய அகாடமி விருது, மறைந்த கவிஞர் இன்குலாப்பின் காந்தள் நாட்கள் படைப்புக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்த கசாக்கின் இதிகாசம் என்ற நாவலுக்கும் சிறந்த மொழியாக்கத்துக்கான விருதும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : S. Ramakrishnan , Writer S. Ramakrishnan, Novel, Sanjari, Sahitya Academy Award
× RELATED தமிழகத்தின் கிருஷ்ணம்மாள்,...