×

திருமங்கலம் அருகே பரிதாபம் மரத்தடியில் வாழ்ந்த எட்டு மாத கர்ப்பிணி

திருமங்கலம் : திருமங்கலம் அருகே சொந்த வீடு இல்லாமல் மரத்தடியில் வசித்த கர்ப்பிணியை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து அரசு மருத்துவர் பராமரித்து வருகிறார்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சாத்தங்குடி காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (26). ஆடு மேய்க்கும் தொழிலாளி. மனைவி அழகுபொண்ணு (22). இவரது தாய் பார்வை தெரியாதவர். தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர். சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்திய முத்துப்பாண்டி மனைவி, மாமனார், மாமியாருடன் சாலையோர புளியமரத்தின் கீழ், சிறிய குடிசையில் வசித்து வந்தார்.

alignment=


அழகுபொண்ணு தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணி கணக்கெடுக்கும் பணிக்கு வந்த கிராம சுகாதார செவிலியர் வசந்தி, அழகுபொண்ணுவை பரிசோதனை செய்ததில், அவருக்கு ரத்தசோகை இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சாத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலமுருகனுக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக அழகுபொண்ணுவை ஆரம்ப சுகாதார நிலையத்தில், உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சையளித்து வருகிறார்.

இதுகுறித்து மருத்துவர் பாலமுருகன் கூறுகையில், ‘‘அழகுபொண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம். குழந்தை பிறக்கும் வரை இங்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், குழந்தை பிறந்த பின்பு மீண்டும் மரத்தடிக்கு செல்ல முடியாது. எனவே, அவர்கள் தங்குவதற்கு அரசு திட்டம் மூலமாகவோ, தன்னார்வலர்கள் மூலமாகவோ வீடு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirumangalam , Thirumangalam ,Pregnant ,Tree, Government Hospital
× RELATED திருமங்கலம் பகுதியில்...