×

ஒட்டன்சத்திரத்தில் குப்பை உரம் தயாரிக்க 4 குடில்கள் அமைப்பு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க 4 உரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் குடில்கள் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

alignment=


இதுகுறித்து ஆணையாளர் இளவரசன் கூறுகையில், ‘‘ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 1 முதல் 18 வார்டுகள், காந்திமார்க்கெட், பேருந்துநிலையம், தினசரி வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகள் தினமும் 18 டன் சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அதிலிருந்து உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தாராபுரம் ரோட்டில் உள்ள சின்னக்குளத்தில் 2 இடங்களிலும் மற்றும் நகராட்சி அலுவலகம், சிவலிங்கநகர் என மொத்தம் 4 இடங்களில் ரூ.2.27 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

சின்னகுளத்தில் உரக்குடில் செயல்பட துவங்கியுள்ளது. மற்ற இடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருிறது. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை உரக்குடில்களுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இயந்திரம் மூலம் அரைக்கப்பட்டு, தொட்டியில் கொட்டப்படுகிறது. அவை சில நாட்களில் உரமாக மாறிவிடுகிறது. இதனை விவசாயிகள் பெற்று தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை விற்பனை செய்து துப்புரவு பணியாளருக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : garbage fertilizer,Shelters ,Oddanchatram
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்