×

சபரிமலை விவகாரத்தில் ஜாதி அமைப்புகளின் ஆதரவை பெற கேரள அரசு முயற்சி செய்கிறது: முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கண்டனம்

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் ஜாதி அமைப்புகளின் ஆதரவை பெற கேரள அரசு முயற்சி செய்கிறது என முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரத்தில் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளின் முயற்சியை முறியடிக், ஜன்., 1ம் தேதி காசர்கோடு நகரில் இருந்து திருவனந்தபுரம் வரை 600 கி.மீ. தூர பெண்கள் சுவர் அமைக்க மாநில அரசு முயற்சி செய்து வருகிறது எனவும் கூறினார். இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த வரும்படி நாயர் சேவை சங்கத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்த சங்கம் அழைப்பை ஏற்க மறுத்து விட்டது. இந்த போராட்டத்திற்கு ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

இச்சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வரும், கேரள நிர்வாக சீர்திருத்த கமிஷனின் தலைவருமான அச்சுதானந்தன், இந்துத்துவா ஆதரவாளர்கள் பின்பற்றி வரும் செயல்களை காப்பி அடித்து ஜாதி ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என தெரிவித்தார். மேலும் ஜாதி அமைப்புகளின் ஆதரவை பெற முயற்சிப்பது கம்யூனிஸ்ட்களின் பணி அல்ல எனவும் கூறினார். கேரள கம்யூனிஸ்ட், அரசு எடுத்துள்ள முயற்சிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் கண்டனம் தெரிவித்து இருப்பது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Kerala ,caste organizations ,Sabarimala ,CM Achuthanandan , Kerala government,attempts,support,caste organizations,Sabarimala case,Achuthanandan,condemns
× RELATED அதிகரிக்கும் வெயில்; கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை விடுமுறை!