×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விலங்குகள் வாயிலாக பரவும் தொற்று நோய் தடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்தவும், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்கவும், உணவு சார்ந்த கழிவு பொருட்களை உடனே அகற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இதுவரை நடந்த மருத்துவ முகாம்களில் 9.40 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

அதேபோல் 45 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு 4.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் புயலால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது என கூறினார். ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayabaskar ,areas ,Minister ,Kajan , no epidemic,affected areas,Kajan storm,Vijayabaskar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்