×

ஆன்லைனில் புக்கிங் ஃபிளிப்கார்ட் டெலிவரி செய்த போலி ஐபோன் : நடிகர் நகுல் அதிர்ச்சி

சென்னை : திருமண நாளுக்கு மனைவிக்கு பரிசு கொடுப்பதற்காக ஆன்லைனில் ஐபோன் புக் செய்த நடிகர் நகுலுக்கு போலியான போன் வந்துள்ளது. பாய்ஸ், காதலில் விழுந்தேன்,  மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் நகுல். சமீபத்தில் இவர் நடிப்பில் செய் படம்  திரைக்கு வந்தது. திருமண நாளுக்கு மனைவிக்கு பரிசு தர விலை உயர்ந்த ஐபோனை கடையில் சென்று வாங்காமல்,  ஆன்லைனிலேயே வாங்கலாம் என முடிவு எடுத்த நகுல், ஃபிளிப்கார்ட் நிறுவன  வெப்சைட்டில் சென்று 1.25 லட்சம் மதிப்புள்ள ஐபோனை சில நாட்களுக்கு முன் புக் செய்தார்.

இதையடுத்து  அவரது வீட்டுக்கு ஐபோன் பாக்ஸ் வந்தது. அதை ஆசையாக வாங்கி திறந்து பார்த்த  நகுல் அதிர்ச்சியடைந்தார். ஐபோனுக்கு பதில் ஐபோன் வடிவத்தில் இருந்த  குறைந்த விலை சாதாரண மொபைல் போன் இருந்தது. இந்த சம்பவம்  குறித்து அவர் கூறும்போது, ‘எனது 3ம் ஆண்டு திருமண நாள் வருகிறது.  மனைவிக்கு ஐபோன் பரிசளிக்க விரும்பினேன். இதற்காக ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர்  செய்தபோது போலியான ஐபோன் எனக்கு கிடைத்திருக்கிறது. ஃபிளிப்கார்ட் மோசடி  செய்திருக்கிறது. அந்த போன் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனது. ஃபிளிப்கார்ட் கஸ்டமர் கேருக்கு தொடர்புகொண்டபோது சரியாக பதில் இல்லை. பெரும் முயற்சிக்கு பிறகு 12 நாள் கழித்தே இதற்கு தீர்வு என தெரிந்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Flipkart ,Nakul Shock , Fake iPhone delivered,Booking Flipkart online, Actor Nakul Shock
× RELATED ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல்...