×

சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து கொண்டுபோய் இருக்கலாம்: ரிச்சர்ட் பீலே கூறியதாக டாக்டர் சிவக்குமார் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் சிவக்குமார் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடந்தது.  அப்போது டாக்டர் சிவக்குமார் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு முதல்முறையாக சிகிச்சை அளிக்க வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, ‘’ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லலாம்’’, என்று கருத்து தெரிவித்தார். பின்னர் இரண்டாவது தடவையாக வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, ‘’முன்பை விட ஜெயலலிதா உடல்நிலை பரவாயில்லை. எனவே தற்போது வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள தேவையில்லை’’ என்று கருத்து தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு இதயம்-நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் குறித்து அதுசார்ந்த வல்லுனர்கள் தான் சிகிச்சை மேற்கொண்டனர். நான் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர். எனவே எனக்கு அது குறித்து தெரியாது. அதனால், அவருக்கு திடீரென உடல் நிலை பாதித்த பிறகு மருத்துவமனைக்கு செல்லலாம் என்று அறிவுறுத்தினேன். ஆனால், ஜெயலலிதா மருத்துவமனைக்கு வர மறுத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதன்பிறகு அவருக்கு செப்டம்பர் 27ம் தேதி பரிசோதனை செய்த பார்த்த போது இதய வால்வு அடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதய வால்வு அடைப்பு பிரச்னையில் கூட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்து மருத்துவ வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தினோம். ‘’இப்போதைய சூழ்நிலையில் அறுவை சிகிச்சை தேவையில்லை, தேவை ஏற்படும்போது செய்துகொள்ளலாம்’’, என்று அவர்கள் பரிந்துரை செய்தனர்.

கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம்தேதி காலை 11 மணியளவில் கார்ன் பிளாக்ஸ் (சோள உணவு) கேட்டார். ஆனால் அதை அவர் சாப்பிட்டாரா? என்பது எனக்கு தெரியாது. அன்றைய தினம் மதிய உணவுக்கு பின்னர் அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக, சசிகலா எனக்கு தகவல் தெரிவித்தார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நல்ல சிகிச்சை தான் அளிக்கப்பட்டது. குறிப்பாக குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டது, அவரது குடும்பத்தார் எடுத்த முடிவு. இதில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. அதுதொடர்பாக வேறு தகவல் எதுவும் எனக்கு தெரியாது.   இவ்வாறு ஆணைய வட்டாரஙகள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,Shivakumar ,Richard Pele , air ambulance,taken ,abroad, Dr Shivakumar ,felicitated, Richard Pele
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...