×

இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்: பென்டகனில் நிர்மலா-மேட்டிஸ் சந்திப்பில் முடிவு

வாஷிங்டன்: ‘‘இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவற்கான நடவடிக்கைகைள் துரிதப்படுத்தப்படும்’’ என இருநாட்டு ராணுவ அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் - ஜேம்ஸ் மேட்டிஸ் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது. இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அவர் தனது முதல் நிகழ்ச்சியாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்சுக்கு இரங்கல் தெரிவித்து, குறிப்பேடில் கையெழுத்திட்டார். பின்னர், தேசிய போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

அதைத்தொடர்ந்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சென்ற நிர்மலா சீதாராமனை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் வரவேற்றார். இரு அமைச்சர்களும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த சில ஆண்டாக இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவ உறவு வலுப்பெற்று வரும் நிலையில், 2+2 என்ற கூட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பரில் இப்பேச்சுவார்த்தையில் இரு நாட்டு ராணுவ, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக நிர்மலா-மேட்டிஸ் ஆலோசித்தனர். பேச்சுவார்த்தைக்குப் பின் ஜேம்ஸ் மேட்டிஸ் அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவின் தலைமை நிலையான சக்தியாகவும், பிராந்தியத்திலும், ஒட்டுமொத்த உலகிலும் பாதுகாப்பு, அமைதியை ஊக்குவிக்கும் கண்ணோட்டத்தை கொண்டுள்ளது. கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட 2+2 பேச்சுவார்த்தையின்படி, இந்தியா-அமெரிக்கா ராணுவ உறவை பலப்படுத்துவதும் நடடிக்கைகள் விரைவுபடுத்த தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.  

நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘கடந்த 3, 4 ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நம்மிடையேயான பரஸ்பர நம்பிக்கையும், ராணுவ ஒத்துழைப்பில் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

பாகிஸ்தானுக்கு அறிவுரை
அமெரிக்க ராணுவ அமைச்சர் மேட்டிஸ் கூறுகையில், ‘‘ரஷ்யாவிடம் இருந்து ஆயுத கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு பாதிப்பு வராது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.  தெற்காசியாவில் நடக்கும் அமைதி நடவடிக்கைக்கான முயற்சியில் பாகிஸ்தானும் இணைய வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பும் தர வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,India ,meeting ,Nirmala-Matisse ,Pentagon , India, the United States, Elise, mettis
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!