×

‘பாரத் மாதாகி ஜே’க்கு பதிலாக அனில் அம்பானிக்கு ஜே என மோடி முழக்கமிட வேண்டும்: ராகுல் காந்தி ஆவேசம்

ஆல்வார்: ‘‘பிரதமர் மோடி இனிமேல் ‘பாரத் மாதாகி ஜே’ என முழங்குவதை விட்டு விட்டு, ‘அனில் அம்பானிக்கு ஜே’ என முழங்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு நேற்று உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. ஆல்வார் மாவட்டம், மலேகேரா நகரில் நேற்று நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:  கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மோடி, நாடு முழுவதும் 2 கோடி   இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அவ்வாறு அவர் வேலை கொடுத்திருந்தால்  இந்த ஆல்வாரில் மாவட்டத்தில் கடந்த மாதம் 4 இளைஞர்கள் ேவலை கிடைக்காத மன உளைச்சலில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்திருப்பார்களா? பிரதமர் மோடி தான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் பாரத் மாதாகி ஜே’ என முழுக்கமிடுகிறார். ஆனால், உண்மையில் அவர் ‘அனில் அம்பானிக்கு ஜே’ என்றுதான் முழக்கமிட வேண்டும். மெகுல் சோக்‌ஷிக்கு ஜே, நீரவ் மோடிக்கு ஜே, லலித் மோடிக்கு ஜே என்று இனி முழங்க வேண்டும்.

பாரத மாதா என முழக்கமிடும் நீங்கள், ஏன் விவசாயிகளை மறந்தீர்கள்? மோடி அரசு பெரிய தொழிலதிபர்கள் வாங்கிய  ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள நிலையில், விவசாயிகள் பெற்ற கடனில் ஒரு பைசாவையாவது தள்ளுபடி செய்ததா? ராஜஸ்தானில் காங்கிரஸ் உறுதியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் விவசாய கடன் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Jahan ,Rahul Gandhi , Bharat Madhani J, Anil Ambani J, Modi and Rahul Gandhi
× RELATED சபாநாயகர் நியமன விவகாரம்.....