×

பாலவாக்கத்தில் சாலையில் தேங்கிய கழிவுநீர் மக்கள் மறியலால் உடனடியாக அகற்றிய அதிகாரிகள்

துரைப்பாக்கம்: பாலவாக்கத்தில் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே, அதிகாரிகள் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றினர்.  சென்னை பாலாவாக்கம் பச்சையம்மன் தெருவில், கடந்த சில நாட்களாக மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் குளம்போல் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியதால்  கொசுத்தொல்லை அதிகமானது. இதன் காரணமாக காயச்சல், இருமல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், தேங்கிய கழிவுநீரில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று திடீரென பாலவாக்கம் பெரியார் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அடைப்பை சரி செய்யும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Palavakkam , Strengthening, road, stagnant sewage, people stir
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை