×

21 நாட்களுக்கு பின் நாகை மீனவர்கள் இன்று இரவு கடலுக்கு செல்ல முடிவு

நாகை: வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கஜா புயலாக மாறியது. இந்த புயல் நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு நாகையில் கரையை கடந்தது. அப்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் நாகை மாவட்டம் பெரும் சேதமடைந்தது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து மீன்பிடி படகுகள் சேதம் ஏற்பட்டது. கஜா புயலுக்கு முன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் நவம்பர் 13ம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை.  புயலால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 2670க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 877க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், சுமார் 1831 படகுகளின் இன்ஜின்களும் சேதமடைந்தது. மீனவர்களின் வீடுகள் சேதம், படகுகள் சேதம், ஐஸ் உற்பத்திற்கு மின்சாரம் இல்லாதது,

சேதம் அடைந்த படகுகளை கணக்கெடுக்கும் பணி, அந்த படகுகளை சீரமைக்கும் பணி ஆகியவற்றால் மீன் பிடி தொழிலுக்கு மீனவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நாகை மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.  முதல் கட்டமாக நேற்று காலை முதல் படகுகளுக்கு டீசல் நிரப்புதல், ஐஸ் கட்டிகளை படகுகளில் ஏற்றி வைத்தல்  போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 21 நாட்களுக்கு பின் இன்று (4ம் தேதி) நள்ளிரவு முதல் நாகை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,sea , Fishermen, night, sea,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...