×

மலம்பட்டியில் தூய சவேரியார் ஆலய தேர்பவனி கோலாகலம்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பேராம்பூர்  ஊராட்சி மலம்பட்டியில்  புகழ் பெற்ற தூய சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில்  ஆண்டு திருவிழா கடந்த கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சி மறை மாவட்ட அருள் தந்தை யூஜின், கருமண்டபம் ஜுலியன்  கொடியேற்ற திருப்பலி பூஜையை நடத்தினர். தொடர்ந்து நவநாள் திருப்பலி பூஜைகளை அருட் தந்தையர்கள் நடத்தினர். நேற்று (3ம் தேதி) பகல்  தேர் பவனியன்று   தேவராஜ், மெல்கிமேயர், ஜெயராஜ், ஜோசப், அருளானந்தம்  ஆகியோர் திருவிழா திருப்பலி  பூஜையை நடத்தினர்.

இதில் மலம்பட்டி மற்றும் அதன் சுற்று பகுதிகளான  பேராம்பூர், கல்லுப்பட்டி, ஆம்பூரபட்டி,  ஆவூர், ஆலங்குடி, வெண்மணி, பாக்குடி, இலுப்பூர், சாத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு  பகுதியில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும்  திரளாேனார் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து  மாலை  கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. நன்றி திருப்பலி பூஜையை மலம்பட்டி பங்கு தந்தை ரட்சகராஜ் நடத்தினார்.  விழாவையொட்டி நகைசுவைபட்டிமன்றம், கிராமிய இன்னிசை கச்சேரி மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெற்றது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Derpavani kolakalam ,Parampathi , Pillai Sowariyar Temple, Derpavani, Gokalalam
× RELATED பாரை சுற்றி மழை நீர் தேக்கம் க.பரமத்தி...