×

115 மாற்றுத்திறனாளிகளின் பட்டப்படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர் செல்வம்

தேனி: தேனி மாவட்டத்தில் பட்டப்படிப்பு படிக்க பணம் இல்லாம் தவிக்கும் 115 மாற்றுத்திறனாளிகளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 70 பயனாளர்களுக்கு 11 லட்சம் மதிப்பிலான 3 சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள, சக்கர நாற்காலி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஓ.பன்னீர் செல்வம், பள்ளிக்கல்வி முடித்த கல்லூரி படிப்பிற்கு செல்ல முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் தனது படிப்பினை முழுமையாக முடித்து பட்டதாரி ஆகும் வரை அவர்களில் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O. Pannir , 115 Remunerative, Degree, O.Indian Wealth
× RELATED விவசாயிகளுக்கு அதிகம் தேவைப்படும்...