×

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் குவாஜாவின் சகோதரர் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் குவாஜாவின் சகோதரர், தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் முகமது நிசாமுதீன் என்ற மாணவருடைய நோட்டு புத்தகத்தில், தீவிரவாத தாக்குதல் தொடர்பான விவரங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக அவர் கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார். ஆனால் கையெழுத்து ஒத்துப் போகாததால் பின்னர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உஸ்மான் குவாஜாவின் சகோதரர் அர்சலான் குவாஜாவும், நிசாமுதீனும் நண்பர்கள் எனத் தெரிய வந்தது.

ஒரு பெண் தொடர்பாக நிசாமுதீன் மீது குவாஜாவுக்கு ஏற்பட்ட பொறாமை காரணமாக தீவிரவாத தாக்குதல் குறித்த விவரங்களை நிசாமுதீனின் நோட்டு புத்தகத்தில் அவர் எழுதி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அர்சனாலா குவாஜா இன்று கைது செய்யப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Usman Gujaja ,Australian ,brother ,detention police , Australian cricketer,Usman Gujaja's,brother,arrested ,militant detention police
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...