×

மகாராஷ்டிராவில் பரிதாபம் கத்திரிக்காய் கிலோ 20 பைசாவுக்கு விற்றதால் 2 ஏக்கர் விளைச்சலை அழித்த விவசாயி: 2 லட்சம் முதலீடு வீணானது

மும்பை:  மகாராஷ்டிராவில் கத்திரிக்காய் கிலோ 20 காசுகளுக்கு விற்றதை அடுத்து 2 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கத்தரிக்காய் விளைச்சலை விவசாயி ஒருவர் அழித்து விட்டார். விவசாய விளைப்பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி ்கூறி வருகிறார். ஆனால், விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்கக் கோரியும், வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் லட்சக்கணக்கில் டெல்லியில் திரண்டு சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் விளைபொருட்களுக்கு சரியான கொள்முதல் விலை இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் விளையும் பொருட்களுக்கு மலிவான விலைதான் கிடைக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள நாசிக்  மாவட்டத்தில் மாவட்டத்தில், ரகதா பகுதியில் உள்ள சகுரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பவாகே. இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் கத்திரிக்காயை பயிர் செய்தார். இதற்காக மருந்து, உரம் என அவர் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தார்.

ஆனால், கத்தரிக்காயை மொத்தமாக விற்பனை செய்வதற்கு சென்றபோது கிலோவுக்கு 20 காசுகள் மட்டுமே கிடைத்தது. இதனால், பவாகே விரக்தி அடைந்தார். சந்ைதயில் இருந்து திரும்பி வந்த அவர், கோபத்தில் தனது 2 ஏக்கர் நிலத்தில் இருந்த கத்தரிக்காய் செடிகளை பிடுங்கி எறிந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maharashtra , Maharashtra, eggplant, farmer
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...