×

அனுமதி ெபறாமல் சிலர் கடலுக்கு சென்றதால் மீனவர்களுக்கு டோக்கன் வழங்க அதிகாரிகள் மறுப்பு: ராமேஸ்வரத்தில் பரபரப்பு

ராமேஸ்வரம்: இலங்கை போலீசாரால் பாஸ்போர்ட் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, வேலை நிறுத்தம் செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர். ஆனால் அதிகாலை மீன்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி டோக்கன் பெறாமல் சில விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தகவலறிந்த அதிகாரிகள் கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பி வந்தால்தான், மற்றவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்க முடியும் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மீனவர்கள் அலுவலகம் முன்பு திரண்டு, ‘‘அனுமதி பெறாமல் சென்ற படகு மற்றும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். எங்கள் படகுகளுக்கு டோக்கன் வழங்க வேண்டும்’’ என்றனர். பின்னர் 2 மணி நேரத்திற்கு பிறகு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல டோக்கன் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனிடையே அனுமதி டோக்கன் பெறாமல் மீன் பிடிக்க சென்ற 4 பேருக்கு சொந்தமான படகுகள், மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,sea , Rameswaram, Sri Lanka
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...