×

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் புகுந்த கரடி:விவசாயி அலறி ஓட்டம்: வனத்துறையினர் 2வது நாளாக முகாம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கரடி நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் 2வது நாளாக முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாத்தான்குளம் அருகேயுள்ளது அறிவான்மொழி கிராமம். இப்பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன்(50). இவர் நேற்று தனது தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கரடி போன்ற உருவம் வயலில் இருந்து வெளியே தப்புவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து  தகவல் தெரியவந்ததும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருச்செந்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனவர் ரவிச்சந்திரன் தலைமையில் வன காப்பாளர்கள் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தனர். இதில் கரடியின் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கரடி நடமாட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும் என அவர்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து  கரடியை பிடிக்க வனத்துறையினர் இன்று 2வது நாளாக கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். ஏற்கனவே திசையன்விளை-சாத்தான்குளம் இடையே கரடி நடமாட்டம் காணப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மீண்டும் கிராமத்தில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கரடி நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : garden ,Sathankulam ,Forestry Day , Sattankulam, Bear, Farmer, Forest Department, Camp
× RELATED எருமை மாடு முட்டி பெண் படுகாயம்; தந்தை, மகன் அதிரடி கைது