×

வளைகாப்பு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி மொய் பணத்தை கஜா புயல் நிவாரணமாக வழங்கிய தம்பதி

சேலம்: சேலம் பொன்னம்மாபேட்டை அடுத்த வலசையூர் ரோடு வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி பிரபாவதி. விஜயன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 3 வருடம் முன்பு திருமணம் நடந்தது. தற்போது பிரபாவதி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு நேற்று பொன்னம்மாபேட்டையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வளைகாப்பிற்கு வரும் அன்பளிப்புகளை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க விஜயன் - பிரபாவதி தம்பதியினர் முடிவு செய்தனர்.

இதைதொடர்ந்து, இன்று நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வழங்கிய மொய் பணத்தை தனியாக பெட்டியில் போட்டனர். இந்த பணத்தை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக கொண்டு சென்று வழங்கவும் முடிவு செய்துள்ளனர். தம்பதியினரின் இந்த முடிவால் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shower show ,Ghaz , Baby Shower, Moi, Negi, Gaza Storm, Relief, Couple
× RELATED கஜா புயல் பாதிப்பை சீரமைத்த மின்வாரிய...