×

2021 பொங்கல் பண்டிகை: வரும் 11-ம் தேதி முதல் 17 வரை 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.!!!

சென்னை: 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்  வெளியிட்ட அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத்துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர்  திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், போக்குவரத்துத் துறை செயலாளர், திரு.சி.சமயமூர்த்தி மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் இன்று (08/01/2021) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை – 2020 கடந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10/01/2020 முதல் 14/01/2020 வரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம்,  அண்ணாநகர் மேற்கு மாநகரப் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன் 4,987 சிறப்பு  பேருந்துகள் என மொத்தமாக 16,112 பேருந்துகள் இயக்கப்பட்டன மற்றும் பொங்கலுக்கு முன்பு பிற இடங்கலிளிருந்து 6,426 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆக மொத்தம் பொங்களுக்கு முன்பு 22,588 பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து  மேற்படி இயக்கத்தின் வாயிலாக, 8,47,837 பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை -2021 இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2021 முதல் 13/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று  நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 17/01/2021 முதல் 19/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு  ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும்: 1.மாதவரம் புதிய பேருந்து நிலையம்- செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துக்கள்.2. கே.கே. நகர் மா.ந.போ.கழக பேருந்து நிலையம்- ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள். 3. 1. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)- திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள். 2. தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்- திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக  பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.      4. பூந்தமல்லி பேருந்து நிலையம்- வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள். 5.புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு     – மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,  செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு)     வழித்தட மாற்றம் முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து  நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இதர வாகனங்கள் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக  செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு வசதி: முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com k‰W« www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள  வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். நோய் தொற்று காலத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, மாநகர்  போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post 2021 பொங்கல் பண்டிகை: வரும் 11-ம் தேதி முதல் 17 வரை 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.!!! appeared first on Dinakaran.

Tags : Pongal Festival 2021 ,State Rapid Transport Corporation ,Chennai ,Pongal 2021 ,Minister ,Vijayabaskar ,Dinakaran ,
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை...