×

பிக்சல் போன்களில் கால் ஸ்க்ரீன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள்

வாஷிங்டன்: நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் அதன் உதவியுடன் உலகையே சுற்றிவந்து விடலாம் என்ற நிலை ஆகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இருந்தும் அதற்கான மவுசு குறைந்தபாடில்லை. இவ்வாறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான கூகுள் அதன் பிக்சல் ரக போன்களில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அது என்னவெனில்,  கூகுள் பிக்சல் போனுக்கு வரும் அழைப்பை ஏற்கும் முன்னரே யார், எதற்காக அழைக்கிறார்கள் என அறிந்து கொள்ள எதுவாக கால் ஸ்க்ரீன் என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆங்கில மொழி பேசும் வாடிக்கையாளர்களின் Pixel 2, 2 XL, 3, மற்றும் 3XL மாடல்களில் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கால் ஸ்க்ரீன் மூலம் அழைக்கும் போதே யார், எதற்காக அழைக்கிறார் என்ற விவரத்தை பெற முடியும்.

அழைப்பை இணைத்தவுடன், பெறுபவரின் திரையில் அந்த விவரங்களை எழுத்தாகக் காண்பிக்கும். அதைப் பொறுத்து, முக்கியமான அழைப்பா? முக்கியமற்ற அழைப்பா? என்பதை வாடிக்கையாளர் அறிந்து கொள்ளலாம். இந்த வசதி தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிற நாடுகளில் எப்போது அறிமுகமாகும் என்று கூகுள் தெளிவுபடுத்தவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Google , Call Screen, Google Pixel, Google
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்