×

போபால் விஷவாயு கசிவின் 34ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

மதிய பிரதேஷ்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 34 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை இன்றும் தொடர்கிறது. போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு 34 ஆம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தின் போபால் நகரில் அமெரிக்க உர நிறுவனத்துக்குச் சொந்தமான யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. கடந்த 1984-ஆம் ஆண்டில் டிசம்பர் 2-ம் தேதி இரவிலும், அடுத்த நாளான டிசம்பர் 3-ம் தேதி அதிகாலையிலும் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோ சயனடைடு விஷவாயு அந்த ஆலையில் இருந்து கசிந்தது. உயிருக்கு உலை வைக்கும் அந்த வாயு போபால் நகர வளிமண்டலத்தில் மெல்ல கலந்தது. இதில் பலர் தூக்கத்திலேயே விஷ வாயுவை சுவாசித்து உயிரிழந்தனர்.

அதிகாலை நேரத்தில் இந்த கோரம் நிகழ்ந்ததால் தப்ப வழியில்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். மேலும், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தான அதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த பலரும் இன்று வரை விஷவாய்வை சுவாசித்ததன் பின் விளையுகளுடன் வாழ்க்கையில் போராடி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் சிகிச்சைக்கான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆலையில் இருந்து விஷவாயு வெளியேறிய போது பாதிக்கப்பட்ட நிலத்தடிநீர் இதுவரை சீர் செய்யவில்லை என்றும் முற்றிலும் பாதிப்பை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhopal ,gas leak , Madhya Pradesh, Bhopal gas leak
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...