×

செம்பாக்கம் பகுதியில் மின்கம்பியை சூழ்ந்த மரக்கிளைகள் : விபத்து ஏற்படும் அபாயம்

தாம்பரம்: செம்பாக்கத்தில் மரக்கிளைகள் சூழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது பற்றி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் அடுத்த செம்பாக்கம், சரவணா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள முதல் தெருவில் மின்கம்பியில் மரக்கிளைகள் சூழ்ந்து இருப்பதால் காற்று வீசும்போதும், மழைக்காலங்களிலும்  தீப்பொறி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெருவில் நடப்பதற்கே அஞ்சுகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் புகார் அளிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் பல நாட்களாக மின்கம்பியில் மரக்கிளைகள் சூழ்ந்து உள்ளதால் காற்று வீசும்பொழுது தீப்பொறி ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.இதனால் இப்பகுதியில்  அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. அதுமட்டும் இன்றி மின்கம்பியில் மரக்கிளைகள் சூழ்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் அப்பகுதி  பொதுமக்கள் கடக்கும்போது மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இந்த தெருவில் நடந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடந்து செல்லவே அச்சமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து செம்பாக்கம்  மின்சார வாரியத்தில் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து உயரதிகாரியிடம் தெரிவித்தால் அவர் அலட்சியமாக பதிலளிப்பதாக சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tracts ,area ,Zimbabwe ,accident , Sebamakkam, Trellis surrounding,wire,accident
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...