×

புழல், பாடியநல்லூர் பகுதிகளில் தெரு பெயர் பலகையில் போஸ்டர்கள்: மக்கள் கடும் அவதி

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல், கதிர்வேடு, புத்தாகரம், சூரப்பட்டு, லட்சுமிபுரம், ரெட்டேரி, பாடியநல்லூர், ஆட்டதாங்கல் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சிமென்ட் மூலம் தெரு  பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தெரு பெயர் பலகைகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. மேலும் பெரும்பாலான பெயர் பலகை மீது கண்ணீர் அஞ்சலி, பிறந்த நாள் போஸ்டர்கள் ஓட்டி மறைத்துள்ளனர். இதனால் அப்பகுதிக்கு புதிதாக வருகின்ற  நபர்கள் மற்றும் தபால் ஊழியர்கள், கொரியர் ஊழியர்கள், தாங்கள் செல்ல வேண்டிய தெருக்கள் பெயர்கள் தெரியாமல் திணறி வருகின்றனர். பொதுமக்களும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். கையில் பேப்பரை வைத்துக்கொண்டு தெரு பெயர்களை தேடி அலைகின்றனர்.

மேலும் இதுபோன்று தெரு பலகைகளின் மீது ஒட்டிய போஸ்டர்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களும் போஸ்டர்கை அகற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இங்கு உடைந்து கிடக்கிற தெரு பலகைகளை மாற்றியும், அழிந்துள்ள எழுத்துகளை மாற்றியமைத்தும் வருகிறோம். ஒரு சிலர் பெயர் பலகை மீது போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். மக்கள் தான் திருந்த வேண்டும்’’’’’ என்றார்.பொதுமக்கள் கூறுகையில், ‘‘தெரு பலகைகள் மீது போஸ்டர்கள் ஒட்டுபவர் மீது காவல் துறையும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறுக்காக மக்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது’’  என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : street name booth ,areas , Pallam , Padiyanallur, Posters , Severe suffering
× RELATED எடப்பாடி ஆதரவு போஸ்டர்கள் கிழிப்பு: தேனியில் பரபரப்பு