×

உலக கோப்பை ஹாக்கி: பெல்ஜியத்துடன் இந்தியா டிரா

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியுடன் டிரா செய்தது.கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், பெல்ஜியம் அணி 8வது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் ராபி ஹெண்ட்ரிக்ஸ்  மின்னல் வேகத்தில் கோல் போட்டு அசத்தினார். இதைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணி, 30வது நிமிடத்தில் ஹர்மான்பிரீத் சிங் அபாரமாக கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்படுத்தியது.

அடுத்து 47வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் கோல் அடிக்க, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. கடைசி கட்டத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் கோக்னார்ட் கோல் போட்டு 2-2 என சமன் செய்தார். மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் பெற்றன. சி பிரிவில் இந்தியா (4), பெல்ஜியம் (4) முன்னிலை வகிக்கின்றன. இந்தியா தனது 3வது மற்றும் கடைசி லீக்  ஆட்டத்தில் வரும் 8ம் தேதி கனடா அணியுடன் மோதுகிறது. முன்னதாக, கனடா - தென் ஆப்ரிக்கா இடையே நடந்த சி பிரிவு லீக் ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Cup ,India ,Belgium , World Cup, hockey, India draw , Belgium
× RELATED டி20 உலக கோப்பையில் நடராஜன் விளையாடுவார்...: விவிஎஸ் நம்பிக்கை