×

எந்த கள ஆய்வும் நடத்தவில்லை திறக்க மட்டும் உத்தரவு: கிருஷ்ணமூர்த்தி, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்

கடந்த 2013ல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு கசிவு வெளியான போது, மக்கள் போராட்டம் நடந்தது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா வெளியிட்ட அரசாணையை தான் அப்படியே மறு பதிவு செய்து தற்போதைய அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானைக்கு சட்டரீதியாக பெரிய வலிமை கிடையாது என்று ஆளும்கட்சிக்கு நன்றாகவே தெரியும். உண்மையிலேயே மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசு நினைத்திருந்தால், ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். அதற்கான சட்டவடிவு நிறைய உள்ளது.

தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எத்தனையோ தடவை ஸ்டெர்லைட் ஆலைக்கு நிபந்தனை வைத்துள்ளது. இப்போது கூட ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுத்ததற்கு, நிபந்தனையை பின்பற்றாதது தான் காரணம் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. எத்தனையோ தடவை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருந்ததும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. தற்போது வரை ஆலை நிர்வாகம் அந்த விதிமீறல்களை சரி செய்யவில்லை.

1997 முதல் 2018 வரை ஸ்டெர்லைட் ஆலையில் நிறைய விபத்துகள் நடந்துள்ளது. இதில்,குறிப்பாக, 2013ல் மார்ச் 23ம் தேதி மிகப்பெரிய விபத்து நடந்தது. மாவட்ட நிர்வாகம் கெமிக்கல் பேரிடர் நடந்துள்ளது. அப்போது மாவட்ட ஆட்சியர் இதை ஒப்புக்கொண்டார். ஆலை உற்பத்தி செய்யும் தங்கம், பிளாட்டினம்  என்று எதற்கும் எந்த கணக்கும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஒரு பக்கம் சுற்றுச்சூழல் நாசம் செய்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் மூடப்பட்டுள்ளது. அப்படிபட்ட ஆலை நிர்வாகத்திடம், பசுமை தீர்ப்பாயம், யாரை நீதிபதியாக  கமிட்டியில் நியமிக்கலாம் என்று கேட்கிறது. இந்த கமிட்டி அமைப்பதற்கு முன்பே குளறுபடியுடன் அமைத்துள்ளது. ஒரு தரப்புக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்ாக, திட்டமிட்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நியாயமான சந்துரு போன்ற நீதிபதிகள் வரக்கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சொன்னதை பசுமை தீர்ப்பாயம் ஏற்று கொள்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். அகர்வால் கமிட்டி அறிவியல் ரீதியான ஆய்வோ, கள ரீதியான ஆய்வோ மேற்கொள்ளவில்லை. மக்கள் ஊதிய உயர்வுக்கு போராடவில்லை. மக்களின் உயிருக்கு பாதிப்பு என்று தான் போராடினார்கள். அப்படியிருக்கையில் கமிட்டி கள ஆய்வு செய்து இருக்க வேண்டும். ஆரம்ப கட்ட பாதிப்பை பார்த்திருக்க வேண்டும். இதை எதுவும் செய்யாமல் அரசு ஆலை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பாமலும், உரிய கால அவகாசம் வழங்காமல் மூடியுள்ளது என்று கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் தமிழகம் தான் காற்று மாசு பாடு இருக்கிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடியில் நிலத்தடி நீரில் அபாயகரமான கழிவுகள் இருப்பதால், அந்த தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது. அப்படியிருக்கும் போது பாதிப்பை பார்த்து தான் இந்த கமிட்டி அறிக்கை அளித்து இருக்க வேண்டும். வேலாயுதரம், மீளவிட்டான், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் நடத்தும் போராட்டத்தின் போது கூட 12 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.

இது போன்று ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும். இதையெல்லாம் கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால் இந்த ஆலையை திறக்கலாம் என்று கூறியிருக்காது. இப்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை மூடும் வகையில் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கான அரசாங்கம் என்றால், கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : field inspection ,Krishnamurthy , No field inspection,ordered,open,Krishnamurthy,sterile plant,opponent
× RELATED குருமலை காட்டில் நாய்களை வைத்து முயல் வேட்டையாடிய 5 பேர் கைது