×

ரிமோட் கார் வாங்க உண்டியலில் சேர்த்த ரூ.4,000 நிவாரணத்துக்கு வழங்கிய எல்கேஜி மாணவர்

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்த பாபுஜி-ஜெம்மி ஆகியோரின் குழந்தைகள் சர்மிளாதேவி, தனுஷ். கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்மிளா தேவி 5ம் வகுப்பு, தனுஷ் எல்கேஜி படித்து வருகின்றனர். இவர்கள் விளையாடுவதற்காக ரிமோட் கார் வாங்க உண்டியலில் கடந்த 6 மாதமாக ரூ.4 ஆயிரம் சேமித்து வைத்திருந்தனர்.

தற்போது கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உண்டியலில் சேமித்த தொகை ரூ.4 ஆயிரத்தை தங்களின் பொற்றோர் மூலம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினர். இந்த தொகை கஜா மீட்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மாணவ, மாணவிகளை பொதுமக்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,Elgji , Remote car, relief, elgji student
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...