மும்பை: பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம் மேற்கத்திய முறைப்படி நேற்று நடந்தது. இன்று இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கிறது. தமிழன் படம் மூலம் விஜய் ஜோடியாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்வதுடன், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பிரியங்காவுக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கும் இடைேய காதல் மலர்ந்தது. முறைப்படி இருகுடும்பத்தினரும் இவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டன. நேற்று மேற்கத்திய முறைப்படி பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் நடந்தது. இதையடுத்து திருமணம் நடந்த அரண்மனையின் மாடியிலிருந்து கண்கவர் வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இந்திய பாரம்பரிய முறைப்படி இவர்கள் திருமணம் இன்று நடக்கிறது. பிரியங்கா கழுத்தில் நிக் ஜோனஸ் தாலி கட்டுகிறார். முன்னதாக கடந்த 2 நாட்களாக மெஹந்தி, சங்கீத் போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர். நிக் ஜோனஸுக்கு 26 வயது ஆகிறது. பிரியங்காவுக்கு 36 வயது ஆகிறது. நிக் ஜோனஸுக்கு 10 வயது குறைவாக இருந்தபோதும் இருவரும் காதல் வலையில் விழுந்ததையடுத்து வாழ்க்கையில் மனமொத்த தம்பதிகளாக இணைந்திருக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி