×

2022-ம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை நடத்துகிறது இந்தியா..... பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு உலக நாடுகள் ஒப்புதல்

பிருனஸ் அயர்ஸ்: அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டை வருகிற 2022-ம் ஆண்டில் இந்திய நடத்த உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு அர்கென்டினாவின் பிருனஸ் அயர்ஸ் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோட் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின் பிங் உட்பட ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மாநாடு நிறைவு பெறுவதர்க்கு முன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2022-ம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியா தனது 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை 2022-ம் ஆண்டில் கொண்டாட உள்ள நிலையில் அதனுடன் சேர்த்து ஜி-20 உச்சி மாநாட்டை நடத்த முடி வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு இந்த மாநாடு நடைபெற இருந்ததாகவும், தமது கோரிக்கையை ஏற்று 2022-ல் நடத்த அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியாக இந்தியா அசுரர் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இந்தியாவின் பழமையான வரலாறு, பன்முகத்தன்மை, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை அனுபவிக்க வருமாறும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 1999-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு, இதில் தொழில் வளம் மிக்க 19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் இணைந்தன, ஆண்டுதோறும் இதன் உச்சி மாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. உலகளவில் 80 சதவீத வர்த்தகம் ஜி-20 நாடுகளிடையே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : summit ,India ,Modi ,G20 ,countries ,world , G-20 summit, Prime Minister Modi, Brunas Aires, Chancellor Trump,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு