×

கோயில் திருப்பணிகளுக்கு ஆலோசனை 84 பேர் கொண்ட குழுவை நியமித்தது அறநிலையத்துறை: 2 ஆண்டுகள் பணியில் ஈடுபடுகின்றனர்

சென்னை:கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகள் தொடர்பாக அறநிலையத்துறைக்கு ஆலோசனை வழங்க 84 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து கமிஷனர் டி.கே.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,190 கோயில்கள் உள்ளது. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புராதன கோயில்கள் அடக்கம். இந்த கோயில்கள் தொன்மை மாறாமல் புனரமைக்கவும், கோயில்களின் மேம்பாட்டு பணிக்காக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து அறநிலையத்துறைக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பல்துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்கள்  84 பேரை நியமனம் செய்து கமிஷனர் டி.கே.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

 இதில், ஸ்டெக்சுரல் வடிவமைப்பு நிபுணர் குழுவில் 3 பேரும், சிவில் கட்டுமான குழுவில் 5 பேரும், கட்டிட கலைஞர் 14 பேர் கொண்ட குழுவினரும், பாரம்பரிய வண்ணப்பூச்சில் ஈடுபடும் நிறுவனம் (மூலிகை மை), வேதம் மற்றும் ஆகம் தெரிந்த ஒருவரும், சிற்பகலையில் ஈடுபடும் 9 பேரும், கற்சிற்பத்தில் ஈடுபடும் 12 பேரும், ஓவிய வேலைகளில் ஈடபடும் 2 பேரும், மர வேலை பாடுகள் நிபுணர்கள் 5 பேரும், தொல்லியல் துறை நிபுனர்கள் 15 பேர் சுற்றுச்சூழல் நிபுணர் ஒருவர் உட்பட 84 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த நிபுனர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டு ஆகும். இந்த நிபுணர்கள் குழுவினர், அவர்கள் ெசய்யும் பணியை அடிப்படையாக வைத்து அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மண்டல அளவில் நியமனம் செய்யபட்டு, அந்தெந்த மண்டலங்களில் கோயில்களின் புனரமைப்புகளுக்க ஆலோசனை வழங்குவார்கள் என்று இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Temple Trips Appoints a Group , temple,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...