ஏடிஎம்களில் அதிகரிக்கும் கொள்ளை: செக்யூரிட்டி, அலாரம், ஆண்டி ஸ்கிம்மர் எதுவுமில்லை

கோவை: தமிழகத்தில் ஆளில்லாத ஏடிஎம் மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளால் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஏடிஎம்.கள் உள்ளது. தினமும் ஒவ்வொரு ஏடிஎம்.களிலும் 10 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வைக்கப்படுகிறது. ஆனால், மாநில அளவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்.களில் செக்யூரிட்டி கிடையாது. 95 சதவீத ஏடிஎம்.களில் ஆண்டி ஸ்கிம்மர் வசதி கிடையாது. இதனால் ஏடிஎம். மெஷின்களை வெல்டிங் மூலமாக துண்டாக்கி பணம் கொள்ளையடிப்பது, சம்மட்டியால் அடித்து உடைத்து திருடுவது அடிக்கடி நடக்கிறது. மாநில அளவில் நடப்பாண்டில் 413 ஏடிஎம்.கள் திருட்டு கும்பலால் உடைக்கப்பட்டுள்ளது. 120 ஏடிஎம்.களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்ட் எண்ணை அறிய ரகசிய கேமரா, ஸ்கிம்மர் பொருத்தி பணம் சுருட்டுவதும் பரவலாகி வருகிறது. ஆனால், வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கும் வகையிலான திட்டங்களை வங்கிகளும், சைபர் கிரைம் போலீசாரும் இதுவரை மேற்கொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் ஏடிஎம் சென்டர்கள் ஆபத்தான மையங்களாக மாறி வருகிறது.

 இதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து ஏடிஎம்.களிலும் கட்டாயம் செக்யூரிட்டி பணியில் இருக்கவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல ஏடிஎம்களில் செக்யூரிட்டி பணி நியமனம் ெசய்யப்படவில்லை. காரணம், செக்யூரிட்டி நியமனத்திற்கான தொகை முறையாக ஒதுக்கப்படவில்லை. ஏடிஎம் கேமராக்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க ஆலோசனை நடக்கிறது. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஏடிஎம்.களில் குற்றம் நடக்கிறது. இதுபோன்ற ஏடிஎம்.களை இரவு நேரத்தில் மட்டும் மூடி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்படும் ஏடிஎம்.களில் மட்டுமே ஆண்டி ஸ்கிம்மர் என்ற தகவல் திருடும் தொழில்நுட்ப கருவி பொருத்த முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள 80 சதவீத ஏடிஎம்.களில் இந்த தொழில்நுட்ப கருவி அமைக்க முடியாத நிலை இருக்கிறது. ஏடிஎம்.மில் பணம் எடுப்பவர்கள் உஷாராக இருக்கவேண்டும். இவ்வாறு வங்கி அதிகாரிகள் கூறினர்.

சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘‘ஏடிஎம்களை பாதுகாக்கும் திட்டங்களை வங்கிகள் மேற்கொள்ளவேண்டும். பல ஏடிஎம்களில் கொள்ளை நடந்து, பொதுமக்கள் புகார் தெரிவித்த பின்னரே போலீசுக்கு தெரியவந்துள்ளது. வங்கிகளுக்கு அலர்ட் எஸ்.எம்.எஸ் செல்லவில்லை. ெகாள்ைள மற்றும் முறைகேடுகளை தடுக்க தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். கட்டாயம் செக்யூரிட்டி பணியில் இருக்க வேண்டும். அனைத்து ஏடிஎம்.களையும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இணைப்பது சாத்தியமல்ல. ஆனால் ஏடிஎம்.களை மொத்தமாக கண்காணிக்க ஒருங்கிணைப்பு திட்டம் அவசியம்’’ என்றனர்.

கஸ்டோடியன் உஷார்...

ஏடிஎம்.களுக்கு பணம் நிரப்பும் ஊழியர்கள் (கஸ்டோடியன்) பணத்தை முறைகேடு செய்வதும் அதிகரித்து வருகிறது. ஏடிஎம்களில் டெபாசிட் செய்வதுபோல் கணக்கு காட்டி, திருடிவிடுகிறார்கள். பெரும்பாலான மோசடிகள் பல மாதம் கடந்த பின்னரே தெரியவந்துள்ளது. பணம் நிரம்பும் ஊழியர்கள் மீது 150க்கும் மேற்பட்ட மோசடி, திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது. சில ஊழியர்கள் மோசடி செய்த பின்னர் வீட்டை காலிசெய்துவிட்டு வெளியூர் தப்பிவிடுகின்றனர்.

உதவிக்கரம் வேண்டாம்

ஏடிஎம்.களில் உதவி செய்வதுபோல் நடித்து, பணம் திருடும் கும்பலின் அட்டகாசமும் அதிகமாகி விட்டது. ஏடிஎம்.களுக்கு வெளியே காத்திருக்கும் இவர்கள், படிக்காதவர்களுக்கு பணம் எடுத்துத்தர, உதவிசெய்வது போல் நடிக்கிறார்கள். உங்களது கார்டில் பணமில்லை எனக்கூறி ஒரிஜினல் கார்டை வாங்கிக்கொண்டு, அதேபோல் உள்ள போலி ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். சில நிமிடத்தில் பணத்தை திருடிச்சென்று விடுகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>