×

வசீகரிக்கும் நிஸான் கிக்ஸ் ஜனவரியில் அறிமுகம்

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை மனதில் வைத்து புத்தம் புதிய எஸ்யூவி ரக மாடலை நிஸான் நிறுவனம் இந்தியாவில் களமிறக்க உள்ளது. சமீபத்தில் இந்தியர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட இந்த எஸ்யூவி ரக கார், வரும் ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் உற்பத்தி சென்னையில் உள்ள நிஸான் ஆலையில் துவக்கப்பட்டுள்ளது. ரெனோ கேப்சர் எஸ்யூவி ரக கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்பார்மில்தான் இப்புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி ரக காரும் உருவாக்கப்பட்டு வருகிறது. நிஸான் எஸ்யூவி ரக காரின் டிசைன் மிகச்சிறப்பாக இருக்கிறது. முன்புறத்தில் வலிமையான கிரில் அமைப்பு, நவீன கார்களுக்குரிய தோற்றத்தை தரும் ஹெட்லைட் வடிவமைப்பு, பம்பர் ஆகியவை கம்பீரமான தோற்றத்தை தருகிறது. இதன் முகப்பு, முப்பரிமாண தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது, பக்கவாட்டில் மிக கவர்ச்சியாக இருக்கிறது. வலிமையான வீல் ஆர்ச், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல், ரூப் ரெயில் மற்றும் பிரத்யேக வண்ணத்திலான கூரை அமைப்பு ஆகியவை இந்த காருக்கு சிறப்பு சேர்க்கின்றன.

பெட்ரோல் மாடலில் 102 பிஎச்பி பவரையும், 145 என்எம் அளிக்கவல்ல 1.6 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. டீசல் மாடலில், 1.5 லிட்டர் இன்ஜின் இரண்டு விதமான டியூனிங்கில் கிடைக்கிறது. ஒன்று 84 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொன்று 109 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடலிலும் வருகிறது. இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் வருகிறது. ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் இப்புதிய நிஸான் கிக்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nisan Giggs , Nisan Giggs
× RELATED நிசான் கிக்ஸ் தயாரிப்பு ஆரம்பம்